தூய்மையான அரசியலையே நாம் மக்களுக்காக செய்துவருகின்றோம்: டக்ளஸ்

February 5, 2018 6:38 PM

16 0

தூய்மையான அரசியலையே நாம் மக்களுக்காக செய்துவருகின்றோம்: டக்ளஸ்

தூய்மையான அரசியலையே நாம் எமது மக்களின் நலன்சார்ந்து முன்னெடுத்து வருகின்றோமே தவிர ஒருபோதும் நாம் எமது சுயலாபத்தை முன்னிறுத்தி செயற்படுத்தவில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு இன்று தெல்லிப்பழை மாவை கலட்டி பகுதியில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இங்குள்ள மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து தமது உறவினர், நண்பர்கள், நலன்புரி நிலையங்களில் வாழவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலையில் இருந்து அவர்கள் பட்ட துன்ப துயரங்களை நான் நன்கு அறிவேன்.

மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தம் என்ற எமது நிலைப்பாட்டிற்கமைய இந்த மக்கள் அனைவரும் தங்களது சொந்தக்காணிகளில் வாழவேண்டும் என்ற உறுதியுடன் அப்போதைய அரசுடன் கலந்துரையாடியது மட்டுமன்றி வலியுறுத்தி உங்களை இங்கு குடியேற்றியிருந்தேன்.

உங்களை மீளக் குடியேற்றியது மட்டுமன்றி உங்களுக்கான அடிப்படை பிரச்சினைகளையும் ஓரளவுக்கேனும் தீர்த்து வைத்திருக்கின்றேன்.

ஆனால் தேர்தல் வெற்றிக்காக மட்டும் முகமூடிகளை அணிந்தவாறும் பல கோஷங்களை முன்வைத்துக்கொண்டு பல போலித் தேசியவாதிகள் உங்களிடம் வருவார்கள்.

அவ்வாறு வந்தவர்களை நம்பி வடக்கு மாகாணசபைக்கு வாக்களித்த மக்கள் இன்று அதன் முதலமைச்சரையும், அமைச்சர்களையும் ஆளுங்கட்சி உறுப்பினர்களையும் குறைகூறி வருகின்றார்கள்.

அவர்களால் நடப்பது ஒன்றுமில்லை என மக்கள் இன்று உணர்ந்துள்ளனர். இனிமேலும் அவர்களது வாய் ஜாலங்களுக்கு நீங்கள் எடுபட்டுப்போகக் கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...