தாயக மாணவர்களின் அறிவாற்றலை மேம்படுத்த செயலாற்றும் சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம்

July 9, 2018 7:05 AM

6 0

தாயக மாணவர்களின் அறிவாற்றலை மேம்படுத்த செயலாற்றும் சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம்

2018ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான கற்றல் வலுவூட்டலை புலம்பெயர் அமைப்பு ஒன்று முன்னெடுத்துள்ளது.

கடந்த 6ம் 7ம் திகதிகளில் யா/தாளையடி றோ.க.த.க.பாடசாலையில் மாகாண பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 200 மாணவர்களுக்கு கருத்தரங்கு நடத்தப்பட்டது. கருத்தரங்கு சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கருத்தரங்கில் சிறந்த கல்வியாளர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு தேவையான வலுவூட்டல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இதேவேளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மருதங்கேணி கல்வி கோட்ட மாணவர்களுக்கு கற்றலை வலுவூட்டும் முகமாக பாடரீதியான கருத்தரங்கு சித்திரை மாதம் தொடர்சியாக மூன்று நாட்கள் நடைபெற்றன. 120 மாணவர்கள் பங்கேற்ற கருத்தரங்கு சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

யா/செம்பியன்பற்று, அ.த.க.பாடசாலையில் வட மாகாணத்திலுள்ள சிறந்த வளவாளர்களை கொண்டு கருத்தரங்கு நடைபெற்றது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...