தீபா­வளிப் பண்­டிகை முற்­ப­ண­மாக 10,000 ரூபா

October 8, 2017 4:25 AM

6 0

இம்­முறை தீபா­வளிப் பண்­டிகை முற்­ப­ண­மாக 10,000 ரூபா பெற்றுத் தரும்­படி அக்­க­ரப்­பத்­தனை பிர­தேச தோட்டத் தொழி­லா­ளர்கள் கோரி வரு­கின்­றார்கள்.

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு தீபா­வளிப் பண்­டிகை முற்­ப­ண­மாக 6,500 ரூபா பெற்­றுக்­கொ­டுக்­கவே தோட்ட நிர்­வா­கங்கள் தீர்­மா­னித்­துள்­ள­தாக ஏற்­க­னவே செய்­திகள் வெளி­வந்­துள்­ளன.

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு ஒவ்­வோ­ராண்டும் வழங்­கப்­பட்டு வரும் தீபா­வளி முற்­பணம் வட்­டி­யில்லாக் கட­னாக வழங்­கப்­பட்டு 10 மாதாந்த தவ­ணை­களில் மீள அற­வி­டப்­பட்டு வரு­கின்­றது.

எனினும், இன்று விலை­வா­சிகள் மிக அதி­க­மா­கி­விட்ட நிலையில், தோட்டத் தொழி­லா­ளர்கள் சிறப்­பாகக் கொண்­டாடி வரும் தீபா­வளித் திரு­நாளைக் கொண்­டா­டு­வ­தற்கு 6,500 ரூபா எவ்­வ­கை­யிலும் போதாது எனத் தெரி­வித்­துள்ள தோட்டத் தொழி­லா­ளர்கள், இம்­முறை பண்­டிகை முற்­ப­ண­மாக ரூபா பத்­தா­யிரம் பெற்றுக்கொடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி தொழிற்சங்கத் தலைவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...