தோனி மகளுடன் விளையாடிய விராட் கோலி – வைரலாகும் வீடியோ..!!

October 9, 2017 2:00 AM

3 0

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி ராஞ்சியில் 7-ம் தேதி நடைபெற்றது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி மழை குறுக்கிட்டதால் 18.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவின் வெற்றிக்கு 6 ஓவர்களில் 48 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்திய அணி 5.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்த வெற்றிக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டுவிட்டரில் முன்னாள் கேப்டன் தோனியின் மகள் ஷிவாவுடன் விளையாடும் ஒரு வீடியோவை பகிர்ந்தார். அந்த விடியோவில், “ஷிவாவுடன் மீண்டும் இணைந்தேன். தூய குற்றமற்றவர்களுடன் இருப்பது மிகப்பெரிய ஆசீர்வாதம்”, என கூறியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. இதற்கு முன்னதாக கடந்தாண்டு மார்ச் மாதமும் ஷிவாவுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் கோலி பகிர்ந்தார். அந்த புகைப்படம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...