த.தே.கூட்டமைப்பின் போனஸ் ஆசனம் குறித்து டெலோ முன்வைத்துள்ள கோரிக்கை

July 7, 2018 11:35 AM

11 0

த.தே.கூட்டமைப்பின் போனஸ் ஆசனம் குறித்து டெலோ முன்வைத்துள்ள கோரிக்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற "போனஸ்" ஆசனங்களில் ஒன்றை முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கத்திற்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று காலை வவுனியா நகரசபை மண்டபத்தில் ஆரம்பமானது.

தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) கட்சியின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் குறித்த கூட்டம் ஆரம்பமாகியது.

இதில் டெலோ கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி சிறிகாந்த, வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன், மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உற்பட டெலோ கட்சியின் முக்கியஸ்தர்கள், வடக்கு கிழக்கைச் சேர்ந்த கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கலந்து கொண்டிருந்த கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற போனஸ் ஆசனங்களில் ஒன்றை வினோ நோகராதலிங்கத்திற்கு வழங்க டெலோ கட்சியின் தலைமை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளதாக அறிய முடிகின்றது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...