தேசிய படைவீரர் ஞாபகார்த்த தினம் 28,619 விளக்குகளுடன் நாளை அனுஷ்டிப்பு..!!

May 18, 2018 5:53 AM

8 0

தேசிய படைவீரர் ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு 28,619 விளக்குகளுடன் ஆலோக பூஜை வழிபாட்டு நிகழ்வுகள் களனி ரஜமஹ விகாரையில் நாளை (19) இடம்பெறவுள்ளது.

இந்த ஆலோக விளக்கு பூஜைகள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயகவின் ஆலோசனையில் இராணுவத்தின் ஏற்பாட்டில் முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள படையினரது பங்களிப்புடன் நாட்டிற்காக போராடி மரணித்த படை வீரர்களை கௌரவிக்கும் முகமாக இந்த ஆலோக விளக்கு பூஜை வழிபாடுகள் நடைபெறவுள்ளன.

இந்த நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு பதவி நிலை அதிகாரி, முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பலர்;கலந்து கொள்ளவுள்ளனர்.

அத்துடன் அங்கு இடம்பெறும் ´கிலன்பச´ பௌத்த மத பூஜைகளிலும் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...