தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி..!!

January 14, 2018 4:05 AM

11 0

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழ்நாடு மட்டுமின்றி தமிழ்மக்கள் வசித்துவரும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காலையிலேயே எழுந்து புத்தாடை உடுத்து சூரியனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.

நேற்று போகி பண்டிகை கொண்டாடப்பட்டது. நாளை மாட்டுப் பொங்கலும், அதற்கு அடுத்தநாள் காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும். சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.

தமிழ் மக்களுக்கு இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். இத்திருநாள் அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி, நல்லிணக்கத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கட்டும்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...