தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது குற்றச்சாட்டு

November 25, 2017 11:22 AM

5 0

உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்தி வைக்கும் செயற்பாட்டிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடந்தையாக இருக்கிறது என முன்னிலை சோஷலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்னம் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஹட்டனில் இன்று இடம்பெற்ற கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேர்தல் சம்பந்தமாக முக்கிய முடிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா எடுப்பதனால் தேர்தல் தாமதம் ஏற்படுவதற்கும் அவரே பொறுப்பு கூற வேண்டிய நிலையில் உள்ளார்.

ஆனால் இதற்கு முழு பொறுப்பையும் ஏற்க வேண்டியது அரசாங்கமே. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை குறித்த நேரத்திற்கு வைக்க முடியாமல் போனதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

ஆனால் உண்மையான காரணம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினருக்கும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கும் இடையில் நடக்கும் முரண்பாடே ஆகும்.

மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்தி வைக்கும் ஜனநாயக விரோத செயலிற்கு இன்னும் பலர் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...