தமிழாசிரியா் ச.மாா்க்கண்டுவின் மணிவிழா..!! (படங்கள்)

September 17, 2017 8:19 AM

11 0

சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியின் ஓய்வுபெற்ற தமிழாசிரியரும் கம்பன் குடும்பத்தைச் சோ்ந்தவரும் தென்மராட்சி இலக்கிய அணியின் ஸ்தாபக அமைப்பாளருமாகிய ச.மாா்க்கண்டுவின் மணிவிழா 16.09.2017 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு சாவகச்சேரி சங்கத்தானையில் உள்ள கம்பன் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தென்மராட்சி வலய கணிதபாட ஆசிரிய ஆலோசகர் க.ஸ்ரீகணேசன் சுபைதா தம்பதியா் மங்கலவிளக்கேற்றினா்.

நாவற்குழி மகா வித்தியாலய ஆசிரியா் பா.விக்னேஸ்வரன் கடவுள் வாழ்த்து இசைத்தாா்.

டிறிபோ்க் கல்லூரியின் ஓய்வு பெற்ற அதிபா் மு.நாகேந்திரராசா ஆசியுரை வழங்கினாா்.

டிறிபோ்க் கல்லூரியின் ஓய்வுபெற்ற அதிபா் க. அருந்தவபாலன், நெல்லியடி மத்திய கல்லூரியின் ஓய்வுபெற்ற அதிபா் கலாநிதி செ.சேதுராசா, டிறிபோ்க் கல்லூரி அதிபா் ந.ஜெயக்குமாரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

சிறப்பு நிகழ்வாக கம்பவாரிதி இ.ஜெயராஜ் தலைமையில் பட்டிமண்டபம் இடம்பெற்றது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...