தமிழக மீனவரின் சடலத்தை உரிய முறையில் ஒப்படைக்குமாறு நீதிவான் அறிவுறுத்தல்!!

January 14, 2019 5:20 PM

132 0

தமிழக மீனவரின் சடலத்தை உரிய முறையில் ஒப்படைக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவானின் கவனத்திற்கு இன்றைய தினம் திங்கட்கிழமை காங்கேசன்துறை பொலிசார் கொண்டு சென்றனர்.

அதன் போது நீதிவான் உயிரிழந்த மீனவரின் உறவினர்கள் பொறுப்பெடுக்க வந்தால் , அவர்களிடம் சடலத்தை ஒப்படைக்குமாறும், அல்லாவிடின் யாழில்.உள்ள இந்திய துணை தூதரகத்துடன் தொடர்புகொண்டு சடலத்தை ஒப்படைக்குமாறு நீதிவான் பொலிசாருக்கு அறிவுறுத்தினார்.

அது தொடர்பில் யாழில்.உள்ள இந்திய துணை தூதரகத்துடன் பொலிசார் தொடர்பு கொண்ட போது , சடலத்தை பொறுப்பேற்பது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்க கால அவகாசம் கோரியுள்ளனர்.

அதனால் சடலம் தொடர்ந்து யாழ். போதனா வைத்திய சாலை பிரேத அறையில் வைக்கபப்ட்டு உள்ளது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...