தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு !

November 24, 2017 7:09 AM

6 0

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு !

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 27-ம் தேதி தொடங்கியது. தொடங்கிய சில நாள்களில், நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தமிழகம் எங்கும் பரவலாக மழை பெய்தது. அதன் பின்னர், கடந்த சில நாள்களாகவே மழை இல்லாமல் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. மூன்று நாள்களுக்கு முன்பு வரை காலை நேரத்தில் லேசான பனி மூட்டமும் இருந்தது.

இந்நிலையில், மத்திய கிழக்கு வங்கக்கடலில், இன்று உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தென்மேற்கு வங்கக்கடல் நோக்கி நகருகிறது. இதனால், இன்று தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் மிதமான அல்லது இடியுடன்கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆதாரம்: kathiravan.com

வகை பக்கம்

Loading...