தனியார் ஒருவரின் செயற்பாட்டால் கிராம மக்கள் பாதிப்பு!

December 1, 2017 6:08 PM

5 0

தனியார் ஒருவரின் செயற்பாட்டால் கிராம மக்கள் பாதிப்பு!

நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தும் கிளிநொச்சி திருநகர்ப் பகுதியில் உள்ள சித்தப்பா கடைச்சந்திக்கு முன்னால் உள்ள வாய்க்காலை தனியார் ஒருவர் மண்மூட்டைகளை கொண்டு அணை அமைத்துள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அண்மைய நாட்களாக கடும் மழை பெய்துவருகின்றது. இதனால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மழை நீர் தேங்கி நிற்பதனால் மக்கள் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

கிளிநொச்சி திருநகர்ப் பகுதியில் உள்ள சித்தப்பா கடைச்சந்திக்கு முன்னால் உள்ள வாய்க்காலில் வெள்ளநீர் சுமார் ஆறு அடிவரை தேங்கி, வீதிக்கும், மக்கள் குடியிருப்புக்கும் சென்றதனால் கிராம மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.

இதற்கான முழுக்காரணம், தனியார் ஒருவர் மண்மூட்டைகளை கொண்டு வாய்க்காலை மறித்தது தான் என்கிறார்கள் அந்த பகுதி மக்கள்.

இந்நிலையில் இது தொடர்பாக, அக்கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரினால் கரைச்சி பிரதேசசபைச் செயலாளர் கம்சநாதனுக்கு நேற்று இரவு தொலைபேசி மூலம் தகவல் வழங்கப்பட்டது.

அப்பகுதிக்கு விஜயம் செய்த கரைச்சி பிரதேசசபைச் செயலாளர் மற்றும் பணியாளர்கள் கிளிநொச்சி பொலிஸாரையும் அழைத்து குறித்த அணையை உடைத்து வெள்ள நீர் செல்ல ஆவணம் செய்துள்ளனர்.

தனியார் ஒருவர், அண்மையில் குறித்த கழிவு வாய்க்காலை பெரல்கள் மற்றும் கொங்ரீட் கொண்டு தடுத்திருந்தார்.

அதனையும் கரைச்சி பிரதேசசபை பணியாளர்கள் கழிவு நீர் செல்வதற்காக உடைத்திருந்ததுடன், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையிலையே குறித்த தனிநபர் மீண்டும் இவ்வாய்க்காலை மறித்து அணைகட்டி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...