தந்தையின் கோரத் தாக்குதலால் இரு கால்களும் முறிந்த நிலையில் சிறுவன்..!!

April 16, 2018 3:43 AM

8 0

மாங்குளம் நீதிபுரம் பகுதியில் தந்தையின் கோரத் தாக்குதலால் இரு கால்களும் முறிந்த நிலையில் சிறுவன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

முல்லைத்தீவு மாவட்டம் நீதிபுரத்தைச் சேர்ந்த 11 அகவையுடைய கோபாலகிருஸ்ணன் – இசைப்பிரியன் என்ற சிறுவனே இவ்வாறு பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் இனுமதிக்கப்பட்டுள்ளான்.

11 வயதுச் சிறுவன் ஒருவனை தந்தை பலமாகத் தாக்கியுள்ளார். இவ்வாறு தாக்குதலிற்கு இலக்கான நிலையில் இரு கால்கள் மற்றும் உடல் பகுதியிலும் காயங்களுடன் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட சிறுவனின் இரு கால்களும் முறிவடைந்த நிலையில் கானப்பட்டதனால் மாங்குளம் வைத்தியசாலையில் இருந்து நோயாளர் காவு வண்டி மூலம் உடனடியாக வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...