தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது மகள்..!!

December 8, 2018 12:30 AM

27 0

சீனாவில் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 4 வயது சிறுமி தனது தந்தையை திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

Beijing-ஐ சேர்ந்தவர் யுயன் டோங்பாங். இவரின் மகள் யக்சின் (4). யக்சினுக்கு கடந்த 2016-ல் இரத்த புற்றுநோய் ஏற்பட்ட நிலையில் அதற்கான சிகிச்சையை மருத்துவமனையில் தங்கி எடுத்து வருகிறார்.

இந்நிலையில் தனது தந்தை யுயனை சிறுமி யக்சின் மருத்துவமனையிலேயே திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து யயன் கூறுகையில், என் மகள் யக்சின் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என என்னிடம் கோரிக்கை வைத்தார்.

மேலும், பெரிய பெண்ணாக ஆனால் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது எனக்கு தெரியும், ஆனால் அது வரை நான் உயிரோடு இருப்பேனா என எனக்கு தெரியாது என என்னிடம் கூறினாள்.

இது குறித்த புகைப்படம் இணையத்தில் பரவி பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...