தங்கத்திற்காக கொலை செய்த நபருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

May 14, 2018 7:52 AM

11 0

தங்கத்தை கொள்ளையிட்டு, ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தை சேர்ந்த மலட் பெர்னாண்டோ என்ற 62 வயதான நபருக்கே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இவ்வாறு மரண தண்டனை விதித்துள்ளார்.

கடந்த 1992ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு வந்திருந்த குற்றவாளி, தனக்கு ஏற்பட்டுள்ள வயிற்று வலியை தீர்க்க இளநீர் ஒன்றை மந்திரித்து தருமாறு கூறியுள்ளார். அப்போது ஆலயத்தில் இருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுள்ளதுடன் ஆலய பூசகரின் மகனை சுட்டுக்கொன்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கடந்த 28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணைகளின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இந்த தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

குற்றவாளிக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

குற்றவாளிக்கு மரண தண்டனையுடன் 40 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...