டெல்லியில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் தீவிபத்து..!!

April 16, 2018 6:05 AM

9 0

தலைநகர் டெல்லியில் தென்கிழக்கில் அமைந்துள்ள காலிந்தி குஞ்ச் பகுதியில் ரோஹிங்கியா அகதிகள் முகாம் உள்ளது. இங்கு மியான்மர் நாட்டில் இருந்து வந்த 228 அகதிகள் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், இந்த முகாமில் நேற்று அதிகாலை திடீரென தீ பிடித்தது. தீ மளமளவென் பரவியதால் அங்கு தங்கியிருந்த அகதிகள் அவசரமாக வெளியேறினர். அவர்கள் அனைவரும் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

தகவலறிந்து அங்கு 10க்கு மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. அவை மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தன.

இந்த தீ விபத்தில் 44-க்கு மேற்பட்ட டெண்ட்கள் எரிந்து சேதமாகின. விசாரணையில், அகதிகள் முகாமில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...