டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் மகளை கடத்தப்போவதாக இமெயிலில் மிரட்டல்..!!

January 13, 2019 4:05 AM

64 0

தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சியில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி அலுவலகத்துக்கு கடந்த 9ம் தேதி முதல் மந்திரி கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா கடத்தப்பட உள்ளதாக இமெயில் மிரட்டல் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, டெல்லி முதல் மந்திரி மகள் ஹர்ஷிதாவுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

முதல் மந்திரி அலுவலகத்துக்கு வந்த இமெயில் மிரட்டலை அனுப்பியது யார் என்பது குறித்து டெல்லி சைபர் க்ரைம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மகளை கடத்தப் போவதாக இமெயிலில் மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...