டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் ஏ.பி.வி.பி. வெற்றி..!!

September 14, 2018 6:05 AM

8 0

டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தேர்தல் நேற்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. தலைவர், துணை தலைவர், செயலாளர், இணை செயலாளர் ஆகிய நான்கு பதவிகளுக்கு, ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட ஏ.பி.வி.பி., என அழைக்கப்படும் அகில பாரதிய வித்யார்தி பரிஷத் மற்றும் இந்திய தேசிய மாணவர் சங்கம் உள்ளிட்ட 23 பேர் போட்டியிட்டனர்.

இந்தத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. ஓட்டுப் பதிவு முடிவடைந்ததும் ஓட்டு எண்ணிக்கை நேற்று மாலை தொடங்கியது.

இதில் ஏ.பி.வி.பி. அமைப்பின் அங்கிவ் பசோயா தலைவராகவும்,, துணை தலைவராக சக்திசிங், இணை செயலாளராக ஜோதி சவுத்ரி ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்திய தேசிய மாணவர் சங்கத்தை சேர்ந்த ஆகாஷ் சவுத்ரி செயலாளராக வெற்றி பெற்றார்.

ஏ.பி.வி.பி. அமைப்பினர் இந்த தேர்தலில் மோசடி செய்து வெற்றி பெற்றுள்ளனர் என தேசிய மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...