டெல்லி: குருகிராமில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி..!!

October 13, 2017 10:05 AM

4 0

தீபாவளி, தசரா உள்ளிட்ட பல்வேறு பண்டிகை காலங்களில் தென்னிந்தியாவை விட, வட இந்தியாவில்தான் பட்டதாசு விற்பனை அதிகமாக இருக்கும். குறிப்பாக டெல்லி, மராட்டியம், குஜராத், ராஜஸ்தான், அரியானா ஆகிய மாநிலங்களில் மட்டும் பல ஆயிரம்கோடி அளவுக்கு பட்டாசு விற்பனை நடந்து வருகிறது.

பட்டாசு வெடிப்பதால் ஒளி மற்றும் காற்று மாசு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் திடீரென தலைநகரான டெல்லியில் நவம்பர் 1-ம் தேதி வரை பட்டாசு விற்பனைக்கு உச்சநீதின்றம் தடை விதித்தது. தொடர்ந்து மும்பையிலும் பட்டாசு விற்பனை தடை செய்யப்பட்டது.

இந்நிலையில், டெல்லி அருகே உள்ள குருகிராம் பகுதியில் தீபாவளி தினத்தன்று வெடி வெடிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

தீபாவளிக்காக ஏற்கனவே பட்டாசுகள் வாங்கியவர்கள் அவற்றை வெடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அக்டோபர் 19-ம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பட்டாசுகள் வெடித்துக் கொள்ளலாம். அன்றைய தினம் நகரத்தில் 144 உத்தரவு பிறப்பிக்கப்படும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், வழிபாட்டுத் தளங்கள், கல்வி நிலையங்கள், நீதிமன்றங்கள் அமைந்திருக்கும் இடங்களில் இருந்து சுமார் 100 மீட்டர் சுற்றளவுக்குட்பட்ட இடங்களில் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது.

145 டெசிபெலுக்கு அதிகமாக சப்தம் எழுப்பக்கூடிய பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாத்ஷாபூரில் அமைந்திருக்கும் இண்டேன் எரிவாவு நிரப்பும் ஆலையில் இருந்து 500 மீட்டர் வரை பட்டாசுகள் பயன்படுத்தக்கூடாது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...