டிசம்பர் 21 தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல்

November 24, 2017 7:11 AM

5 0

டிசம்பர் 21 தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல்

ஆர். கே. நகர் தொகுதிக்கு டிசம்பர் 21 தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முதல்வராக இருந்த, ஜெயலலிதா, டிசம்பர் 5ல் இறந்தார். அவரது மறைவால், சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி, எம்.எல்.ஏ. பதவி காலியானது. அந்த தொகுதிக்கு, ஏப்ரலில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆளும் கட்சியும், எதிரகட்சியும் வாக்காளர்களுக்கு, பணத்தை வாரி இறைத்ததால், தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

‘டிசம்பர் 31க்குள், இடைத்தேர்தலை நடத்த வேண்டும்’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . இந்நிலையில் ஆர். கே. நகர் இடைத்தேர்தல் வருகின்ற டிசம்பர் 21 தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகின்ற நவம்பர் 27 தேதி தொடங்க உள்ளது.

வேட்பு மனு தாக்கலுக்கான இறுதி நாள் டிசம்பர் 4 தேதியாகவும் , வேட்புமனுவை வாபஸ் வாங்குவதற்கு 7 ஆம் தேதியும் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . மேலும் ​ டிசம்பசர் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று கூறப்பட்டுள்​ளது.

தொடர்ந்து பல சிக்கலால் ஆர். கே. நகர் தேர்தல் தடைபட்டு வந்தது. இந்நிலையில் நேற்றுதான் முதலவர் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து உடனடியாக இன்று ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிக்கப்பட்டது பல கேள்விகளை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

ஆதாரம்: kathiravan.com

வகை பக்கம்

Loading...