ஜேர்மனி அழகி போட்டியில் அசத்திய யூத பெண்

December 1, 2017 11:55 AM

6 0

ஜேர்மனி அழகி போட்டியில் அசத்திய யூத பெண்

ஜேர்மனியில் பிறந்த யூத பெண்ணொருவர் முதல் முறையாக அந்நாட்டின் தேசிய அழகிய போட்டியின் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

மிஸ் ஜேர்மனி 2018 அழகி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் இறுதி சுற்றுக்கு 20 பேர் தகுதி பெற்றுள்ள நிலையில் ஜேர்மனியில் பிறந்த யூத பெண்ணான தமர் மொரலி (21)-யும் அதில் ஒருவராவார்.

ஜேர்மனி அழகி போட்டிகள் வரலாற்றில் யூத பெண் இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும்.

மொரலி ஜேர்மனியின் கார்ல்ஸ்ருஹி நகரில் பிறந்தார், பின்னர் இளம் வயதில் ஆஸ்திரியாவுக்கு குடிபெயர்ந்தார்.

யூத மக்கள் கார்ல்ஸ்ருஹி நகரில் மிக குறைவாகவே இருந்தனர், அவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் மொரலி வளர வேண்டும் என நினைத்த அவர் பெற்றோர் ஆஸ்திரியாவுக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது இஸ்ரேலில் மொரலி, தகவல் தொடர்பு மற்றும் வணிக பட்டப்படிப்பை படித்து வருகிறார்.

இறுதி போட்டிக்கான ஓன்லைன் வாக்களிப்பு ஞாயிறு தொடங்கும் நிலையில் போட்டியானது பிப்ரவரி 24-ஆம் திகதி நடக்கவுள்ளது.

ஆதாரம்: kathiravan.com

வகை பக்கம்

Loading...