ஜெயலலிதாவின் பெயர் கோமளவள்ளி அல்ல – ஜெ.தீபா..!!

November 10, 2018 11:05 AM

11 0

விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தில் வில்லி வேடத்தில் வரலட்சுமி நடித்துள்ளார். அவருக்கு கோமளவள்ளி என்று பெயர் வைத்து இருந்தனர்.

இதற்கு அ.தி.மு.கவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோமளவள்ளி என்பது முன்னாள் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இயற்பெயர். எனவே அதை நீக்க வேண்டும் என்று கூறினார்கள்.

சில அமைச்சர்களும் இதே கருத்தை தெரிவித்தனர். அ.தி.மு.க.வினர் நடத்திய போராட்டத்துக்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்பட்டது.

இதுபற்றி கருத்து தெரிவித்த டி.டி.வி. தினகரன், ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவள்ளி அல்ல. இதுபற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் ஜெயலலிதா கூறும்போது, ‘‘ஏன் எனது பெயர் கோமளவள்ளி என்று சொல்லி பிரச்சினை ஆக்குகிறார்கள்?

எனது உண்மையான பெயர் அது அல்ல. இந்த பெயர் கொண்ட வேடத்திலும் நடிக்கவில்லை’’ என்று தெரிவித்தார் என்று சமீபத்தில் கூறினார்.

ஜெயலலிதா பற்றி எனது தந்தைக்கு தான் நன்றாக தெரியும். அவர் அம்மு என்று செல்லப்பெயரில் தான் அழைப்பார். மைசூரில் பிறந்த அவருக்கு ஜெயா என்றுதான் பெயர் சூட்டினார்கள்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...