ஜிம்பாப்வே அதிபருடன் துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு சந்திப்பு..!!

November 4, 2018 4:00 AM

11 0

ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு, போட்ஸ்வானா நாட்டிலிருந்து நேற்றிரவு ஜிம்பாப்வே வந்தடைந்தார்.

ஹராரே நகரில் உள்ள ராபர்ட் கேப்ரியேல் முகாபே சர்வதேச விமான நிலையத்தில் அந்நாட்டின் துணை ஜனாதிபதி கெம்போ மொஹதி, வெளிவிவகார துறை மந்திரி (பொறுப்பு) கெயின் மதீமா மற்றும் ஜிம்பாப்வேக்கான இந்திய தூதர் ரங்சங் மசாகுய் ஆகியோர் வெங்கைய்யா நாயுடுவை அன்புடன் வரவேற்றனர்.

ஜிம்பாப்வே நாட்டில் வாழும் இந்தியர்கள் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய வெங்கைய்யா நாயுடு இன்று பிற்பகல் அந்நாட்டு அதிபர் எம்மர்சன் நங்காக்வா-வை சந்தித்தார்.

இந்தியா-ஜிம்பாப்வே நாடுகளுக்கு இடையிலான பல்வேறு தரப்பு நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...