ஜப்பானில் குடியிருப்பு பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: வீடு தீக்கிரை..!! (வீடியோ)

February 5, 2018 4:00 PM

3 0

ஜப்பானின் தெற்மேற்கு பகுதியில் உள்ள கன்சாகி நகரில் ராணுவ ஹெலிகாப்டரில் வீரர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு பகுதியில் விழுந்து தீப்பிடித்துள்ளது. இதில் ஒரு வீடு முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. ஹெலிகாப்டர் விழுந்த பகுதியில் இருந்து மிக உயரத்திற்கு கரும்புகை எழுந்துள்ளது.

விபத்து பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அங்கு வசித்த பொதுமக்களையும் வெளியேற்றினர். ஆம்புலன்சுகளும் வரவழைக்கப்பட்டன. மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை. ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை பாதுகாப்புத்துறை மந்திரி இட்சுனோரி ஒனோடெரா உறுதி செய்துள்ளார். விபத்தில் சிக்கிய அப்பாச்சி ரக ஹெலிகாப்டரில் 2 பேர் பயணித்ததாக பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். எனவே, மீட்பு பணி முடிந்தபிறகே உயிர்ச்சேதம் குறித்த தகவல் வெளியாகும்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...