ஜனாதிபதியின் சர்வதேச விவகார ஆலோசகர் நியமனம்

May 17, 2018 11:52 AM

9 0

ஜனாதிபதியின் சர்வதேச விவகார ஆலோசகராக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரான மருத்துவர் சமன் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து அவர் நேற்று நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் 30 வருடங்களுக்கு மேலான அனுபவங்களை கொண்டுள்ள சமன் வீரசிங்க, 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை ரஷ்யாவுக்கான இலங்கையின் தூதுவராக பணியாற்றி வந்துள்ளார்.

அவர் தனது பதவிக்காலத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தியுள்ளார். அத்துடன் மேலும் சில சர்வதேச விவகாரங்களை திறம்பட கையாண்டுள்ளார்.

இவற்றை கவனத்தில் கொண்டு சமன் வீரசிங்க, ஜனாதிபதியின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான ராஜதந்திர வரலாற்றில் முதல் முறையாக இலங்கையின் ஜனாதிபதி ஒருவர் ரஷ்யாவுக்கு விஜயம் செய்திருந்தார்.

ரஷ்யாவுடன் ஏற்பட்ட தேயிலை தொடர்பான பிரச்சினையை தீர்க்கும் விவகாரத்தை வீரசிங்க திறம்பட கையாண்டுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைய வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதினையும் சமன் வீரசிங்க பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...