ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்த வேண்டியது காலத்தின் தேவை!

November 12, 2017 3:40 PM

6 0

ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்த வேண்டியது காலத்தின் தேவை!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அனைவரும் ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்தவேண்டும் என பட்டிருப்பு தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் இ.தவஞானசூரியம் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் பட்டிருப்பு தொகுதியில் உள்ளடங்கிய மண்முனை தென் எருவில் பற்று, போரதீவு பற்று, போரதீவுப்பற்று மேற்கு ஆகிய பிரதேச சபையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிடுவதற்கு வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான கலந்துரையாடல் இன்று களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள அவரது கட்சி காரியாலயத்தில் நடைபெற்றது.

அதில் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

பட்டிருப்பு தொகுதி மக்கள் இம்முறை எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்தும் வகையில் வாக்களிக்க வேண்டும்.

இந்தநாட்டிலே என்றும் இல்லாதவாறு நல்லாட்சியினை உருவாக்கி அனைத்து இனமக்களின் ஒற்றுமைக்காக ஜனாதிபதி பாடுபட்டு வருகின்றார்.

தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என்ற அடிப்படையில் செயற்பட்டு வருகின்றார்.

பட்டிருப்பு தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் இல்லாத குறையொன்று உள்ளது. இதனை கருத்திற் கொண்டு ஜனாதிபதியின் கவனம் தொகுதி மேல் இருக்கின்றது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது நிற்சயமாக ஜனாதிபதி அவர்கள் இத் தொகுதிக்கு வருகை தர இருக்கின்றார்.

இதன்போது நேரடியாக எமது தொகுதி நிலைமை தொடர்பில் எடுத்தியம்ப இருக்கின்றேன்.

எனவே எமது பிரதேசங்களின் அபிவிருத்திக்கும் மக்களின் வாழ்க்கைதர உயர்வுக்கும் நாங்கள் ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...