ஜனாதிபதி மைத்திரிக்கு பெரும் சவாலாக மாறியுள்ள சமூக வலைத்தளங்கள்!

August 12, 2018 2:23 AM

10 0

சமூக வலைதளங்களின் ஊடாக சிலர் போலியான தகவல்களை பரப்புவதற்கு முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கை பற்றிய சரியான நேர்மறையான பிரதிமையை காட்டுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் தேவையை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்கள் மற்றம் உயர்ஸ்தானிகர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

குறித்த தூதுவர்கள் மற்றம் உயர்ஸ்தானிகர்கள் ஆகியோரை சந்தித்த போதே ஜனாதிபதி இந்த விடயத்தை வலியுறுத்தி உள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் தொலைநோக்கு தொடர்பில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை அனைத்து நாடுகளுடனும் நட்புறவான கொள்கையை பேணுவதாகும்.

ஏதேனும் காரணத்தினால் அந்த இருதரப்பு நட்புறவுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்குமானால் அதனை உடனடியாக சரி செய்வது இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்களின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தூதுவர்களின் முக்கியமானதும் முதலாவதுமான பொறுப்பு இலங்கையின் நற்பெயரை சர்வதேச மட்டத்தில் மேம்படுத்துவதும் தாம் இருக்கின்ற நாடுகளின் அதிக பட்ச ஒத்துழைப்பை நாட்டுக்கு பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதும் ஆகும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...