சுவிஸில் பொதுமக்களுக்கு இறையாசி வழங்கவுள்ள மன்னார் ஆயர்..!!

September 14, 2018 4:24 PM

9 0

மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி பிடலிஸ் லியோனல் இம்மானுவேல் பெர்ணான்டோ சுவிஸிற்கு விஜயம் செய்துள்ளார்.

இந்தநிலையில் சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் ஏற்பாட்டில் ஓல்ரனில் நாளை(சனிக்கிழமை) நடைபெறவுள்ள கலைவிழாவில் அவர், பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

அத்துடன், நாளை மறுதினம்(ஞாயிற்றுக்கிழமை) ஓல்ரன் மரியன்னை ஆலயத்தில் சுவிஸ் வாழ் தமிழ்க் கத்தோலிக்க இறைமக்களுக்கு திருப்பலி நிறைவேற்றி இறையாசி வழங்கவுள்ளார்.

மன்னார் ஆயர் அங்கு தங்கி இருக்கும் நாட்களில் மொன்சிங்கர் லூயிஸ் கப்பில்லா கூர் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி வீர்த்துஸ், பாசல் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி பீலிக்ஸ் உள்ளிட்ட சுவிஸ் கத்தோலிக்க மதப் பெரியார்களை நட்புறவு ரீதியில் சந்திக்கவுள்ளார்.

இதேவேளை, கடந்த காலங்களில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் மக்களின் மேம்பாட்டிற்கு மன்னார் மறைமாவட்டம் குரல் கொடுத்து வந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...