சுவிஸ் மலைகளுக்கு தொடங்கப்படும் நேரடி விமான சேவை: அசத்தலான சலுகைகள்..!!

November 12, 2017 12:00 AM

10 0

Powdair என்ற புதிய விமான நிறுவனம் பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலிருந்து சுவிட்சர்லாந்தில் உள்ள முக்கிய மலைகளுக்கு நேரடி விமான சேவையை தொடங்கவுள்ளது.

பிரித்தானியாவின் மான்செஸ்டர், லண்டன், தெற்கு ஆம்டன், பிரிஸ்டல், பெர்ஜியத்தில் உள்ள ஆண்ட்வெர்ப், சுவிஸின் ஜூரிச் போன்ற இடங்களிலிருந்து Powdair விமான சேவை நிறுவனம் சுவிஸின் Valais பகுதியில் உள்ள மலைகளுக்கு விமான சேவையை டிசம்பரில் தொடங்கவுள்ளது.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள Powdair விமான நிறுவனத்தின் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் Sion நகரில் அமைந்துள்ளது.விமானமானது மலைப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ரிசார்ட் உணவகங்களான Zermatt, Verbier, Crans Montana, Anzère, Nendaz, Thyon 4 Vallees-க்கு நேரடியாக சென்றடையும்.

Powdair விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு 23 கிலோ அடங்கிய உடமைகள், பனிகட்டியில் சறுக்கி விளையாட உதவும் ஸ்கேட்டிங் உபகரணங்கள், உணவு திண்பண்டங்கள், பானம் வழங்கப்படும்.

பயணச்சீட்டின் ஆரம்ப விலை £125-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கொண்ட விபரங்களை அறிய அதற்கான இணையளத்தை காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...