சுவிஸ் மருத்துவமனைகளில் பரவி வரும் நோய்க்கிருமி: எச்சரிக்கை தகவல்..!!

August 12, 2018 1:00 AM

9 0

சுவிஸ் மருத்துவமனைகளில் ஆண்டிபயாட்டிக்குகளால் குணமாக்க இயலாத ஒரு நோய்க்கிருமி பரவி வருகிறது.

வான்கோமைசின் என்னும் ஆண்டிபயாட்டிக் உட்பட பல மருந்துகளுக்கு அடங்காத ஒரு நோய்க்கிருமி சுவிஸ் மருத்துவமனைகளில் பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இவ்வகைக் கிருமி ஏற்கனவே வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை எளிதில் பாதிக்கக்கூடியதாகும்.இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்தத்தில் தொற்று ஏற்பட்டு மோசமான விளைவுகள் ஏற்படக்கூடும்.

பல ஆண்டிபயாட்டிக்குகள் இந்த கிருமியின் மீது செயல்படாது என்பதால் இந்த நோய்த்தொற்றைக் குணமாக்குவது கடினம்.

சுவிட்சர்லாந்தில் 150க்கும் அதிகமானவர்கள் இந்த கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...