செவ்வாய் கிரகத்தில் புதைந்து கிடக்கும் பனிப்பாறைகள்..!!

January 13, 2018 5:00 PM

11 0

செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் ‘நாசா’ மையம் தற்போது ஆய்வு மேற் கொண்டு வருகிறது. ‘கியூரியாசிட்டி’ என்ற விண்கலம் அங்கு முகாமிட்டு செவ்வாய் கிரகத்தின் நில அமைப்பு, சுற்றுச் சூழல், தட்பவெப்ப நிலை குறித்த தகவல்களை போட்டோ மூலம் அனுப்பி வருகிறது.

இந்த நிலையில் அங்கு தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னோடியாக செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் பனிப்பாறை படிவங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நிலப்பரப்பில் இருந்து 100 மீட்டர் வரை அவை படர்ந்து கிடக்கின்றன. இது போன்ற பனிப்பாறைகள் அங்கு 8 இடங்களில் இருப்பதாக அரிசோனா பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வு விஞ்ஞானி ஷேன் பைரன் தெரிவித்துள்ளார்.

செவ்வாய் கிரகம் செல்லும் விஞ்ஞானிகள் தங்கள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும். ஒரு வாளியும், துண்டும் கொண்டு போனால் போதும் என கேலியாக தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...