சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவரை சிறையில் அடைத்த நீதிபதி இளஞ்செழியன்

November 24, 2017 5:14 AM

5 0

சிறுமியைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய முதியவர் ஒருவருக்கு ஓராண்டு கடூழியச் சிறைத்தண்டனை விதித்தது யாழ்.மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2013ஆம் ஆண்டு சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், 65 வயதுடைய வயோதிபருக்கு எதிராக யாழ். மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அது தொடர்பில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் வயோதிபரை குற்றவாளியாகக் கண்ட மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் வயோதிபருக்கு ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்தார்.

பத்தாயிரம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது. தண்டப் பணத்தைக் செலுத்த தவறின் ஒரு மாத கால கடூழிய சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார். அதனை கட்டத்தவறின் மேலும ஆறு மாத கால கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...