சீனாவில் உள்ள வணிக வளாகத்தில் கத்துக்குத்து தாக்குதலில் பெண் பலி..!!

February 12, 2018 4:00 AM

5 0

சீனா தலைநகர் பீஜிங் அருகே உள்ள சீசெங் மாவட்டத்திற்குட்பட்ட சீடான் பகுதியில் ஜாய் சிட்டி என்ற வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தினுள் இன்று உள்ளூர் நேரப்படி மதியம் ஒரு மணியளவில் மர்ம நபர் ஒருவர் கத்தியுடன் நுழைந்தார்.

அந்த நபர் திடீரென அங்கிருந்தவர்களை கத்தியால் பலமாக தாக்கினார். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் அலறியடித்துகொண்டு அங்கிருந்து வெளியேறினர். இந்த தாக்குதலில் 10 பெண்கள், 3 ஆண்கள் உட்பட 13 பேர் காயமடைந்தனர்.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட சூ (35) என்பவரை கைது செய்தனர். இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குகொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். வணிக வளாகத்தினுள் நுழைந்து மர்ம நபர் நடத்திய கத்திகுத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...