சென்னை விமான நிலையத்தில் இலங்கை பயணிகளிடமிருந்து அமெரிக்க டாலர்கள் பறிமுதல்!

February 5, 2018 9:26 AM

13 0

சென்னை விமான நிலையத்தில் இலங்கையிலிருந்து இருந்து வந்த இரு பயணிகளிடமிருந்து ரூ.8 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இன்று காலை கொழும்பிலிருந்து சென்னை வந்த விமானத்திலிருந்து வந்த பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் பரிசோதனை நடத்தினர்.

அதில் இரு பயணிகள் அணிந்திருந்த பெல்ட்டில் அமெரிக்க டாலர்கள் மறைத்து வைத்திருப்பது கண்டறியப்பட்டது.

பயணிகள் மறைத்து எடுத்து வந்த அமெரிக்க டாலர்களின் மதிப்பு இந்திய அளவில் ரூ.8 லட்சம் மதிப்புள்ளதாகும். அவை உடனடியாக அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

இரு பயணிகளையும் போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...