சுதந்திர தினத்துக்கு முன்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தல்: பிரதமர் கட்டளை

November 24, 2017 5:50 PM

5 0

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கான சட்ட முறைமைகள்பற்றி தனக்கு உடனடியாக அறிவிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சட்டத்தரணிகள் குழுவொன்றுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சி சபைகளின் எல்லைகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை வரையறைசெய்து உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சரால் வெளியிடப்பட்ட வர்த்தமானிஅறிவித்தலுக்கு டிசம்பர் மாதம் 4ஆம் திகதிவரை மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவைப் பிறப்பித்துள்ள நிலையிலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு ஆலோசனை கோரியுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் சுதந்திர தினத்துக்கு முன்னர் நடத்தி முடிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் தொடர்பிலும் தனக்கு அறிவிக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...