சிட்லபாக்கத்தில் 10 ஆயிரம் விநாயகர் சிலை கண்காட்சி..!!

September 13, 2018 1:05 PM

8 0

விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிட்லபாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 10 ஆயிரம் விநாயகர் சிலைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது.

கண்காட்சியில் பல்வேறு வடிவங்களுடன் விநாயகர் சிலைகள் விதவிதமாக காட்சி அளிக்கிறது. இதில் அனைத்து வகை கற்களால் ஆன பிள்ளையார் சிலைகள், கண்ணாடி பிள்ளையார் சிலைகள், 25 தலைகள் 52 கைகளுடன் சாம்பசிவ கணபதி சிலை, 12 அடி உயர தும்பிக்கையை தூக்கி ஆசிர்வதிக்கும் விநாயகர், நீச்சல் குளத்தில் படகில் செல்லும் விநாயகர், ரெயில் ஓட்டும் விநாயகர், நவக்கிரகங்களை சுற்றிவரும் விநாயகர் சிலை என வித்தியாசமான சிலைகள் காண்போரை ஆச்சரியப்பட வைக்கிறது.

இந்த கண்காட்சி விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது. அனுமதி இலவசம் ஆகும். கண்காட்சியை ஏராளமான பொது மக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட கூடுதல் இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இதையொட்டி திருவள்ளூரில் 231, திருத்தணியில் 272, ஊத்துக்கோட்டையில் 227, பொன்னேரியில் 223, கும்மிடிப்பூண்டியில் 202 ஆகிய 5 உட்கோட்டங்களில் மொத்தம் 1155 சிலைகள் வைத்து வழிபாடு நடக்கிறது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...