சீசல்ஸ் கடற்பரப்பில் சிக்கின இலங்கை கப்பல்கள்..!!

November 8, 2018 6:57 AM

27 0

சீசல்ஸை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இரு சிறிய இலங்கை கப்பல்களை கைப்பற்றியுள்ளதாக சீசல்ஸசின் கரையோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.

இரு வெளிநாட்டு மீன்பிடி கப்பல்களை சீசல்சின் கரையோர காவல்படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர் என தெரிவித்துள்ள அந்த நாட்டின் பாதுகாப்பு படையினர் உள்ளுர் மீனவர்களின் தகவல்களை தொடர்ந்தே இலங்கை கொடியுடன் காணப்பட்ட கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டன என குறிப்பிட்டுள்ளன.

சீசல்சின் கடற்படை கப்பல்கள் அந்த கப்பல்களை இடைமறித்தன அதன் பின்னர் கடற்படையினர் சீசல்ஸின் மீன்பிடி அதிகார சபையிடம் கையளித்தனர் அவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர் என அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சீசல்ஸ் கடற்படையினரால் வழமறிக்கப்பட்ட கப்பலின் மாலுமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...