சிங்களவர்கள் இதனை செய்கின்றனர், ஆனால் தமிழர்கள் யோசிப்பதுகூட கிடையாது

May 17, 2018 9:28 AM

7 0

சிங்கள பிரதேசத்தில் நஞ்சற்ற விவசாய செய்கையை செய்கின்றனர், ஆனால் தமிழ் மற்றும் முஸ்லிம் பகுதிகளில் இவற்றை செய்வதற்கு யோசிப்பது கிடையாது என பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் விவசாய சங்கங்களுக்கு நீர் இறைக்கும் கருவிகள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

எதிர்காலத்தில் கல்குடாப் பிரதேசத்திலுள்ள மீன்பிடி மற்றும் விவசாய சமூகங்களுக்கு எவ்வளவு உதவிகளை செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்து தருவோம். எதிர்காலத்தில் கல்குடாப் பிரதேசத்திலுள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ளும் வகையில் என்ன வேலைத் திட்டங்களை செய்யலாம் என்று நீங்கள் தெரிவித்தால் அந்த வேலைத் திட்டத்தினை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

ஊர் ரீதியான பற்று மற்றும் ஊர் அரசியல் மாற்றப்பட வேண்டும் என்ற பற்று இருக்க வேண்டும். என்றோவொருநாள் உங்கள் பிள்ளைகளுக்கு இந்தப் பிரதேசத்தில் அரசியல் தலைமைத்துவத்தை கொடுக்க வேண்டும் என்று நீங்கள் கனவு காண வேண்டும்.

சிங்கள பிரதேசத்தில் நஞ்சற்ற விவசாய செய்கையை செய்கின்றனர். ஆனால் தமிழ் முஸ்லிம் பகுதிகளில் இவற்றை செய்வது கிடையாது. அதனை செய்வது யோசிப்பது கிடையாது.

அவசரமாக வேலைகளை செய்கின்றோம். எனவே நஞ்சற்ற விவசாய செய்கைக்கு சந்தையில் நல்ல மதிப்பு உள்ளதால் இந்த நஞ்சற்ற விவசாய செய்கையை செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...