சிக்கன் மீது கொண்ட தீரா பசியால் போஸ்டரில் இருந்த சிக்கனை சாப்பிட்ட 3 வயது சிறுவன்: கமெராவில் சிக்கிய காட்சி..!!

June 14, 2018 12:30 AM

7 0

பிலிப்பைன்சில் மூன்று வயது சிறுவன் உணவகத்தில் இருந்த போஸ்டரைப் பார்த்து அதிலிருந்த சிக்கனை சாப்பிட முயற்சி செய்துள்ளான்.

பிலிப்பைன்சின் Malasiqui பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் உறவினர் மற்றும் தன் மூன்று வயது மகன் உடன் வெளியில் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

கடும் பசியில் இருந்த அவரது மகன் அங்கிருந்த உணவகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த போஸ்டரை வெகு நேரம் பார்த்துள்ளார். அதன் பின் திடீரென்று அந்த போஸ்டரில் இருந்த சிக்கனை சாப்பிட முயற்சி செய்கிறார்.

இது குறித்து சிறுவனின் தாய் கூறுகையில், நான் என் உறவினர் மற்றும் மகனுடன் வெளியில் சென்றிருந்தேன். என் மகனுக்கு மிருதுவான உணவு என்றால் மிகவும் பிடிக்கும், நாங்கள் உணவகம் திறக்கப்படுவதற்காக காத்திருந்த நேரத்தில் சிக்கன் மீது கொண்ட ஆசையால் அவன் அதை சாப்பிட முயற்சி செய்தான்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...