சம்பள முறைப்பாட்டுக்கு யோசைன முன்வைக்கும் காலம் இன்றுடன் நிறைவு..!!

September 14, 2018 7:44 AM

8 0

சம்பள முரண்பாடுகள் சம்பந்தமாக தேடிப் பார்ப்பதற்கு நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவுக்கு யோசனைகளை முன் வைப்பதற்கு வழங்கப்பட்டிருந்த காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

இன்றைய தினத்திற்குள் யோசனைகளை முன்வைக்க முடியும் என்று ஆணைக்குழு கூறியுள்ளது.

தற்போது சுமார் 70 யோசனைகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகள் சம்பந்தமாக நம்பிக்கை வைக்க முடியாது என்று அரச நிறைவேற்று அதிகாரிகளின் சங்கம் கூறியுள்ளது.

எதிர்வரும் வரவு செலவு திட்டத்திற்கு முன்னதாக அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் செயற்பாட்டு சிக்கல் இருப்பதாக அதன் தலைவர் நிமல் கருணாசிறி கூறினார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...