சமாஜ்வாடி கட்சி தலைவர் அசாம் கான் – மகனுக்கு கொலை மிரட்டல்..!! (வீடியோ)

February 10, 2018 1:05 PM

5 0

உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாடி கட்சி தலைவர் அசாம் கான் மற்றும் அவரது மகனும், எம்.எல்.ஏ.வுமான அப்துல்லாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களுல் ஒருவர் அசாம் கான். இவர் தற்போது ராம்பூர் தொகுதி எம்.எல்.வாக உள்ளார். அவரது மகன் அப்துல்லா சுவார் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

இந்நிலையில், நேற்று அப்துல்லாவின் போனுக்கு ஒரு வெளிநாட்டு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர் இன்னும் 24 மணிநேரத்திற்குள் அப்துல்லாவையும், அவரது தந்தை அசாம் கானையும் கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்துல்லா போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் போனில் கொலை மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன்காரணமாக அசாம் கான் மற்றும் அப்துல்லாவுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் விபின் தடா தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...