சமஸ்டி ஆட்சி முறை தொடர்பில் அமெரிக்காவின் உதவியுடன் பல பகுதிகளில் கருத்தரங்கு?

November 12, 2017 10:07 AM

6 0

சமஸ்டி ஆட்சி முறை தொடர்பில் அமெரிக்காவின் உதவியுடன் நாட்டின் பல பகுதிகளில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருவதாக கொழும்பு வார இறுதி ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் யூ.எஸ்.எயிட் என்ற நிறுவனம் இந்த கருத்தரங்குகளை நடத்துவதற்கு நிதி உதவி வழங்கியுள்ளது. மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தின் ஊடாக கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன.

இரகசியமாக முன்னெடுக்கப்பட்ட இந்த கருத்தரங்குகளுக்கு 40 உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.

நாட்டில் இனப் பிரச்சினை காணப்படுவதாகவும் சமஸ்டி ஆட்சி முறையே இதற்கு தீர்வு எனவும் கருத்தரங்கு மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் சமஸ்டி ஆட்சி முறைமை உருவாக்கப்பட வேண்டுமென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசப் தெரிவித்துள்ளார் எனவும், இது தொடர்பில் தூதரகத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...