சண்டிகரில் எரிவாயு பலூன் வெடித்து விபத்து – 15 பேர் காயம்: வீடியோ..!!!

October 9, 2017 1:25 PM

5 0

பஞ்சாப் மாநில தலைநகர் சண்டிகரில் உள்ள ஆலன் கேரியர் என்ற கல்வி நிறுவனத்தின் ஆண்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் அந்நிறுவனத்தில் பயின்ற முன்னாள் மாணவர்கள் உட்பட ஏராளாமானோர் கலந்து கொண்டனர். அப்போது நைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் வானில் பறக்கவிடுவதற்காக வைக்கப்பட்டிருந்தன.

மூவர்ணத்தில் அமைக்கப்பட்ட அந்த பலூன்களை முன்னாள் மாணவர்கள் மேடைக்கு வந்து பறக்கவிட்டனர். அப்போது திடீரென பலூன் வெடித்து சிதறி தீப்பிடித்தது. இதில் 10 மாணவர்கள் மற்றும் 5 ஆசிரியர்கள் உட்பட 15 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பலூன் அருகில் இருந்த மின்விளக்கிலிருந்து வந்த வெப்பமே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...