சட்டவிரோத முதிரை மரங்களுடன் மர ஆலை உரிமையாளர் கைது..!!

September 17, 2017 10:31 AM

9 0

அனுமதிப்பத்திரமின்றி 26 பாரிய சட்டவிரோத முதிரை மரங்களை பதுக்கி வைத்திருந்த மரஆலையின் உரிமையாளர் காத்தான்குடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஷாந்த பிரபாத் கஸ்தூரி ஆராய்ச்சி தெரிவித்தார்.

நேற்று(16) சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்திற்குட்பட்ட பூநொச்சிமுனையிலுள்ள மரஆலையொன்றில் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 26 பாரிய முதிரை மரங்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் விரைவில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இவ் விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...