சட்டவிரோத மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது..!! (படங்கள்)

October 9, 2017 2:40 PM

5 0

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மரங்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதை அதனை தடுக்கும் வகையில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில் வாகரைப் பிரதேசத்தில் இருந்து ஓட்டமாவடிப் பகுதிக்கு கொண்டுவரப்பட்ட சட்டவிரோத அறுவை வேப்ப மரங்களை ஏற்றிவந்த வாகனத்தை கைப்பற்றியதுடன் அதன் சாரதியினையும் வெள்ளிக்கிழமை(06.09.2017) காலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசேட பொலிஸ் குழுவினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது ஓட்டமாவடி பாலத்திற்கு அருகில் வைத்து குறித்த வாகனமும், வேப்பை மரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஏ.சிவதர்சன் தலைமையிலான குழுவினர்களான ஏ.பி.பஸ்நாயக, ஏ.ஜே.விஜயசிங்க, ஐ.சி.விஜயவர்த்தன, எம்.எஸ்.ரூபசிங்க, டி.எஸ்.மஹிபால ஆகியோரின் நடவடிக்கையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஒன்பது அடி நீளம் கொண்ட 18 வேப்பை மரங்கள் மற்றும் வாகனம், வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோத மரங்கள் வெட்டி கடத்தப்படும் சம்பவங்களை தடுக்கும் வகையில் விசேட பொலிஸ் குழுவினர் இரவு பகலாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி.மேனன் தெரிவித்தார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...