சட்டத்தை மதிக்கும் சாரதிகளுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி

September 17, 2017 8:18 AM

9 0

போக்குவரத்துச் சட்டங்களை மதித்து வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் பரிசுகளை வழங்கும் திட்டம் நாளை கொழும்பில் நடைபெறவுள்ளது.

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் யோசனைக்கு அமைவாக செயற்படுத்தப்படும் இத்திட்டத்தின் முதலாவது பரீட்சார்த்த முயற்சி சில வாரங்களுக்கு முன்னர் கண்டியில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதன்போது சட்டங்களை மதித்து வாகனங்களை ஓட்டிய சாரதிகள் 300 பேர் பொலிஸாரினால் பரிசுக் கூப்பன்கள் வழங்கி பாராட்டப்பட்டனர்.

இதன்போது பொலிஸாரால் சிறந்த வாகன ஓட்டிகளாக அடையாளம் காணப்படும் நபர்களுக்கு பணப்பரிசு, இலவச மருத்துவ சிகிச்சை வசதி, பல்வேறு நிறுவனங்களில் சேவைகளைப் பெற்றுக் கொள்ளும்போது விசேட கழிவுக் கட்டண கூப்பன் என்பன வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...