சட்டசபையை ‘கட்’ அடித்து விட்டு இசை நிகழ்ச்சியில் ஆட்டம் போட்ட கர்நாடக எம்.எல்.ஏ..!!

November 15, 2017 1:05 PM

9 0

கர்நாடக மாநில சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. பெல்காம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக உள்ள அம்பரீஷ் நேற்று அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், பெங்களூருவில் நேற்று நடைபெற்ற சினிமா இசை நிகழ்ச்சி ஒன்றில் அம்பரீஷ் நடனமாடும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கூறும் போது, அம்பரீஷ் வேறு விதமான அரசியல்வாதி எனவே, இதை பொருட்படுத்த தேவையில்லை என்றார். அம்மாநில காங்கிரஸ் ஆட்சியில் மொத்தம் 14 கூட்டத்தொடர்கள் என மொத்தம் 218 நாட்கள் சட்டசபை கூடியுள்ளது. ஆனால், வெறும் 4 நாட்கள் மட்டுமே அம்பரீஷ் அவைக்கு வந்துள்ளார்.

சட்டசபையில் கூட பங்கேற்காமல் இசை நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு நடனமாடியுள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...