கீழ் முறிப்பு பகுதியில் 26 வீடுகளிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!!! (படங்கள்)

January 13, 2019 9:40 AM

82 0

கீழ் முறிப்பு பகுதியில் 26 வீடுகளிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!!! (படங்கள்)

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீடமைப்பு திட்டத்தின் கீழ் முறிப்பு பகுதியில் 26 வீடுகளிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று பா.ம உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தலமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று பனல் 12 மணியளவில் கிளிநாச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் உள்ள முறிப்பு பிரதேசத்தில் இடம்பெற்றது.

தேசிய வீடமைப்புக்கான அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களின் வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த பகுதியில் 11 வீடுகள் மற்றும் 15 வீடுகளை கொண்ட இரு மாதிரி வீட்டு திட்டங்களை அமைக்கும் வகையில் குறித்த வீடுகளிற்கான அடிக்கல் பா. ம உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தலமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலக திட்டப்பணிப்பாளர், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளர், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...