கொழும்பு வாழ் மக்களுக்கான விசேட அறிவித்தல்

November 24, 2017 7:39 PM

4 0

கொழும்பின் பல பகுதிகளில் நாளைய தினம் நீர் விநியோகம் 18 மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளது.

நாளைய தினம் காலை 8 மணியிலிருந்து நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி வரையிலான காலப்பகுதியில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.

அத்தியாவசிய திருத்த வேலைகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு, தெகிவளை, கோட்டே, கடுவல மாநாகர சபை எல்லை பிரதேசம், மற்றும் மகரகம ,பொறலஸ்கமுவ, கொலன்னாவ, நகரசபை எல்லைப்பகுதிகளுக்கு நீர்விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.

இதேபோன்று கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச நகரசபை பகுதிகளிலும், இரத்மலானை சொய்சாபுர ஆகிய பகுதிகளுக்குமான நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...