கொழும்பில் பெண்ணுக்கு நேர்ந்த கதி! ரணிலின் பாதுகாப்பு அதிகாரியின் மோசமான செயல்

June 11, 2018 3:21 PM

6 0

கொழும்பு, குருந்துவத்தை தேசிய நூலகத்திற்கு அருகில் பெண்ணின் சங்கிலியை பறித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்த நபர் தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

45 வயதான சந்தேகநபரை் தப்பிச் செல்லும் போது குருந்துவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுபாப்பு பிரிவில் இணைக்கப்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை அமைப்பின் கான்ஸ்டபிளாக பணியாற்றிய அதிகாரி என தெரியவந்துள்ளது.

இந்த அதிகாரி 29 வயதுடைய நுவன் செனரன் ரூபசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...